என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நாம் தமிழகர் கட்சி
நீங்கள் தேடியது "நாம் தமிழகர் கட்சி"
தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது ஒருவித லஞ்சம் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இது ஒருவித லஞ்சம் தான். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் நிலை தான் இருக்கிறது என்றால், என் தேசம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்று பார்க்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படுவார்கள். தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை.
ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. ஆட்சியையே அவர்கள் தான் நடத்துகிறார்கள். அவர்கள் தனித்து தேர்தலை சந்திக்க மாட்டார்கள். தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள். எல்லா கட்சிகளும் வெற்றியை நோக்கி தான் செல்கிறார்கள். நாங்கள் தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை ஏற்க மறுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட 40 பேர் இறந்து உள்ளனர். இது மன்னிக்க முடியாத செயல். அவர்களின் தேவை, நோக்கம் என்னவென்று தெரியவில்லை. 350 கிலோ வெடிமருந்தை ஏற்றி கொண்டு அந்த வாகனம் வரும் வரை சோதனை சாவடிகள் இருந்ததா, இல்லையா? உளவு கட்டமைப்பு நமது நாட்டில் இருக்கிறதா, இல்லையா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நாட்டில் மக்களை தான் அச்சுறுத்தி வைத்து உள்ளனர். ஆனால் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை.
தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இது ஒருவித லஞ்சம் தான். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் நிலை தான் இருக்கிறது என்றால், என் தேசம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்று பார்க்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படுவார்கள். தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை.
ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. ஆட்சியையே அவர்கள் தான் நடத்துகிறார்கள். அவர்கள் தனித்து தேர்தலை சந்திக்க மாட்டார்கள். தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள். எல்லா கட்சிகளும் வெற்றியை நோக்கி தான் செல்கிறார்கள். நாங்கள் தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை ஏற்க மறுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman
திருச்சி விமான நிலையத்தில் இன்று வைகோ- சீமான் முன்னிலையில் ம.தி.மு.க. -நாம் தமிழர் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #TrichyAirport #MDMK #NaamThamizharkatchi
திருச்சி:
தமிழகத்தில் காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வைகோவை பற்றியும் அவரது போராட்டம் பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். மேலும் அக்கட்சியினரும் வைகோவை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சீமான் மற்றும் அக்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருப்பினும் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.
வைகோ, சீமான் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் , வைகோவை அவரது கட்சி தொண்டர்களும், சீமானை அவரது கட்சி தொண்டர்களும் கோஷம் எழுப்பி வரவேற்றனர். ஒரே இடத்தில் நின்று 2பேரையும் வரவேற்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், வைகோவை பற்றி கிண்டலாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் தட்டிக்கேட்டனர்.
இந்த மோதலில் நாம் தமிழர் கட்சி தொண்டர் கரிகாலன் என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும் மற்றொரு தொண்டருக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். இதையறிந்ததும் விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியய்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காயமடைந்த 2பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு கட்சி தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வைகோவும், சீமானும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport #MDMK #NaamThamizharkatchi
தமிழகத்தில் காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வைகோவை பற்றியும் அவரது போராட்டம் பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். மேலும் அக்கட்சியினரும் வைகோவை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சீமான் மற்றும் அக்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருப்பினும் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதற்காக 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது கட்சி கொடிகளுடன் விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இதனிடையே வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், வைகோவை பற்றி கிண்டலாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் தட்டிக்கேட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் இரு தரப்பினரும் தாங்கள் வைத்திருந்த கொடி கம்பங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலால் விமான நிலைய வளாக பகுதியானது போர்க்களம் போல் காட்சியளித்தது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வந்த உறவினர்கள் பலர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு கட்சி தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வைகோவும், சீமானும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport #MDMK #NaamThamizharkatchi
×

X